ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
====================
குழல் இசைக்க வரும்
கன்றாக யாம்அழைக்க வருபவனே
குழந்தையாய் பாதச்சுவடுப் பதித்தே
குலம்காக்கும் கோவிந்த வந்திடு

யசோதையின் மைந்தனே வரம்
யாவும் தந்து மகிழ்பனே
ராதையின் மணவாளனே உள்ள
ரணங்களை இன்பம் ஆக்குபவனே

கோதையின் உள்ளம் கவர்ந்தவனே
கொங்குதேனாக வாழ்வினை தருபவனே
கோவையர் கொண்டாடும் கொகுலா
கோபங்கள் நீர்த்துபோகச் செய்பவனே

எட்டவதாகப் பிறந்தவனே கீதையெனும்
ஏட்டில் நாயகானாக விளங்குபவனே
எட்டுத்திக்கும் நிறைந்து அனைத்திலும்
ஏகாந்த நிலையில் இருப்பவனே

எட்டுடெத்து வைத்து இல்லங்களில்
எல்லை வந்து தொல்லையில்லா
ஏழ்மையில்லா வாழ்வில் உயர்ந்திடுனும்
எட்டுத் தொகைத் தமிழாக

எட்டியே தொட்டிடனும் சிகரத்தை..

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும்
அன்பான கொகுலாஷ்டமி வாழ்த்துக்கள்

இப்படிக்கு
உங்கள் சகோதரி
ஆன்மீக ஆய்வாளர் ஜமீன் அழகாபுரி திருமதி.S.பூமாரி பாக்யா's நாச்சியார்...

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Sep-23, 10:14 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 69

மேலே