கொடுத்து வாழவேண்டும்
கொடுத்து வாழவேண்டும்
18 / 09 23
கொடுத்து வாழவேண்டும் - பிறரை
கெடுத்து வாழ்ந்திடாதே
குணத்தில் வாழவேண்டும் - பிறரின்
பணத்தில் வாழ்ந்திடாதே
வாழ்வில் நூறு தடைகள் இருக்கும்
பாதை தன்னை தடுக்கும்.
மனதில் கொஞ்சம் சலனம் இருந்தால்
வாழ்க்கை முழுதும் கலக்கம்.
பொன்னில் இன்பம் பெண்ணில் இன்பம்
என்றே மாயை மயக்கும்
உன்னை நீயே உணர்ந்துகொண்டால்
உலகம் உன்னை வியக்கும்.
மண்ணில் நீயும் வாழும் வரையில்
புண்கள்தானே கிடைக்கும்.
விண்ணில் நீயும் பறந்திடத்தானே
சிறகுகள் அங்கே கிடக்கும்.
உன்னைத் தேடி போகப்போக
விடைகள் அங்கே இருக்கும்
தன்னைத்தானே அறிந்துகொண்டால்
தடைகள் தானே விலகும்.
( சிரித்து வாழவேண்டும் - பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே...என்கின்ற
சினிமா பாடலின் மெட்டில்...)