புத்தம் புது ராகம்
ஆற்றங்கரையில் நின்றிருந்தேன் நான்
முற்றும் முன்னே கேட்காத புது
ராகம் வானில் மிதந்துவந்து என்காதில்
விழுந்தது வந்த திசைநோக்கிப் பார்த்தேன்
நதியில் மிதந்துவந்தது சிறு படகு
அதை ஓட்டிவரும் படகோட்டி பாடி
வந்தான் அவன் இசை என்னை
மலைக்கவைத்தது சிலைபோல் ஆனேன்
புத்தம் புது ராகத்தில் நாட்டுப்புற பாட்டு
அது ஓட்டிடும் அலுப்பை மறைக்க படகோட்டி
பாடும் பாட்டு .....அத்தனை அழகாய்
சுருதி லயம் தாளம் கூட
அவன் பாடியது ..... யோசித்தேன்
இன்னும் இப்படி நாமறியா இசை
எத்தனை விதமோ யாரறிவார்
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால்
இப்படி பல அனுபவம் கிட்டும் நமக்கு