புது உலகம் வேண்டும்
புது உலகம் வேண்டும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கயல்கள் நீந்திடும்
கடலில் மிதந்திடும்
கப்பலில் பயணிப்போம்
கோபமின்றித் துன்பமின்றித்
கவலையின்றி இன்பமுடன் வாழக்
கண்டறிவோம் புது உலகை
கன்னிகளைச் சீரழிக்கும்
காமக் கொடூரர்களை
காண உலகில் வாழக்
கண்டறிவோம் புது உலகை
மதுக்கு அடிமையாக்கும்
மதிகெட்ட அரசும்
மது வாடை இல்லாது
மனைவி மக்களுடன்
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட
மகத்தான உலகைக் கண்டறிவோம்
சுயநலம் மிகுந்த
சடலமாக வாழும்
சண்டாள உலகமின்றி
சகோதரத்துவத் தர்மகுணத்தோர் வாழும்
சந்தோசத் தரணியைக் கண்டறிவோம்
மனிதநேயம் சிறிதின்றி
மனிதன் வாழும்
மயானம் வேண்டாம்
மனிதம் வாழும்
மானுடப் பூமியைக் கண்டறிவோம்
தொற்று நோயினால்
தனித் தீவில்
தனிமைப் படுத்தும்
தண்டனை இல்லாத
தீங்கற்றச் சுகமான
தோப்பாகக் கூடி வாழ
தொன்மைமிக்க உலகை கண்டறிவோம்
கரைசேர கப்பலில்
கண் மூடி
காண்கிறேன் கனவாக
விடிவில்லா கனவோடு
விடியாத விடியோலடு
விடிந்தது காலை
சமத்துவப் புறா ஞான அ பாக்கியராஜ்