களவாடப்படும் கன்னிகள்
களவாடப்படும் கன்னிகள்
×××××××××××××××××××××××
வன்மைமிகு ஆண்மை
வணங்கிட வேண்டியோர்
வம்மையாகச் சிசுஈன்றிடும்
வன்கண்ணிப் பெண்களுமே
கள்ளும் கவறுமல்லா
கன்னிகளும் பெண்டிரும்
கரடு முரடானக்
கயவர் கூட்டமே
களவாடும் காமூகனை
கழுகுக்கு இரையாக்க
காமக் கண்களை
குஞ்சிக்கது ஊட்டிடுமே
கட்டுக் காவலாகக்
காரிகையைக் காத்திடவே
கட்டும்பு ஆடவர்
கடமை யாகுமே
கன்றினைப் பிடிக்க
கோபமுற்றப் பசுவாக
வன்கண்ணாளே எழுந்திடு
வன்கொடுமைகளை அகற்றிடு
வன்மை - திறன்,வம்மை - கொடை
வன்கண்ணி - அஞ்சாமையுடைய
கள் - மது, கவறு - சூதாட்டம்
கட்டு - சுவர்,காவல் - காவலர்
வன்கண்ணள் - கடுமையான மனம் படைத்தவள்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்