விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
அஞ்சுதலை அழித்து அபயம் தந்திட
ஆறுதல் அளித்து அற்புதங்கள் நிகழ்த்திட
இன்னல்களை போக்கி இன்பம் அருளிட
ஈசனின் புதல்வன் ஆணை முகத்தனை
உள்ளம் உருகி பக்தியோடு வணங்கிட
ஊறுகளெல்லாம் கானல் நீர் போல் மறைந்திட
எங்கும் எதிலும் முன்னிலை வைத்து தொழுதிட
ஏமாற்றம் எப்போதும் இல்லாமல் வழிவகுப்பான்
ஐங்கரனை வணங்கினோர் உணர்ந்த உண்மை இது
ஒரு பொழுதும் அவனை மறவாமல் இருப்பவர்கள்
ஓதிடும் மந்திரங்களால் வழிபட்டு பயனடைவர்
அப்பெருமானை போற்றி கொண்டாடிட ஒரு நாள்
இப்பொன்னாள் விநாயகர் சதுர்த்தி என அறிவோமே

