ஈருடலில் ஓருயிராய்

ஈருடலில் ஓருயிராய்!!
&&&&&&&&&&&&&&

எங்கேயோ பிறந்தாய்
இங்கேயா வளர்ந்தாய் /
மங்கையே எவ்வாறு
மனதுள்ளே வந்தாய் /

குழந்தையாய் உன்னைக்
கண்டதும் இல்லை /
எழுந்ததும் நடந்ததும்
எனக்குத் தெரியாதே /

பள்ளியில் இருவரும்
பழகியதும் உண்டோ /
கல்லூரிக் காலத்தில்
கண்டதும் எங்கே /

பேருந்து நிலையத்தில்
பண்டிகைக் கூட்டத்தில் /
சீருடன் உன்றனை
சந்தித்துக் களித்தோமா /

வானின்று இறங்கிய
தேவதைப் போலவே /
தேனிசைக் குரலினாள்
தேர்ந்தனை என்னையே /

செம்புலப் பெயல்நீராய்ச்
சேர்ந்தனை என்னையே /
நம்மிரு உடலிலும்
ஓருயிரே வாழுமே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (24-Sep-23, 8:20 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 51

மேலே