சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன்

சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன்
{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}

தூரிகையால் வரையாத
தொடுவான ஓவியமோ /
உளியில்லாமல் செதுக்கிய
உயிர்யுள்ள சிலையோ /

பிரம்மன் படைப்பில்
பிரமிக்கிறேன் உன்னழகில் /
மயங்கிடும் அந்திமாலையில்
மலந்திடும் மல்லிகையாக /

மகுடியின் இசையில்
மயங்கிடும் நாகமாக/
காலில் நாட்டியமாடிடும்
கொலுசின் ஓசையில் /

மயங்கி கதலுற்று
மனதில் பதிக்கிறேன் /
தடாகத்தில் நீர்
தரைதெரிந்திட வற்றினாலும் /

உன் நினைவுகள்
என்றும் மறையாது /
சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன்
சம்சாரமாக வந்திடவே /

பயிர்களுக்கு நீரைப்
பகிரும் வரப்பாக /
பொஞ்சாதிய வந்து
பகிர்ந்திடு இன்பத்தை/

தென்னையை அழிக்கும்
காண்டாமிருக வண்டாக/
காதலை அழித்திடும்
சாதி மதங்களை /

காதல் தீயின்
கனலால் சாம்பலாக்கி/
காதல் வாழ்வு
செழித்திட உரமாக்கிடுவோம் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (25-Sep-23, 5:45 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 55

மேலே