காதல் பதியன்

பூந்தோட்டத்தில்
பூக்களின் அழகை
ரசிக்க வந்தேன்

பட்டாம்பூச்சிப் போல்
எங்கிருந்தோ
பறந்து வந்த நீ
எந்தன் கண்களுக்கு
விருந்து கொடுத்து
என் இதய தோட்டத்தில்
காதல் செடியை பதியம் போட்டு
பறந்து சென்று விட்டாய்

பதியம் போட்ட நாள் முதல்
காதல் செடியை வாடாமல்
பாதுகாத்து வருகிறேன்

காதல் ரோஜா மலர்வதற்கு
ராஜா நான் காத்து நிற்கிறேன்
பூத்து குலுங்குவதற்கு
காதல் ராணியே நீ விரைந்து வா.,.!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Sep-23, 5:32 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 87

மேலே