காகிதக் கனவுகள்

காகிதக் கனவுகள்
●●●●●●●●●

விழி கண்ட உன்னை
வரவேற்று இதயகதவு திறந்து
காகித மடல் விரித்து
சுட்டு விழி கண்டு
சொட்டும் குருதினை கொண்டு
எழுதி விட்டேன் காதல்மடல்
மணப்பந்தத்தில் இணைவோம் என்றபோது
சாதி சதி செய்தது
மதம் மதி கெடுத்தது
காகித ஓடம் போல்
கரை சேரவில்லை - எங்கள்
காதல் காகிதக் கனவாக

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (26-Sep-23, 7:04 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : kaakithak kanavugal
பார்வை : 87

மேலே