என் பௌர்ணமி ஒருநாளும் தேய்வதில்லை
தென்றல் விடுமுறை எடுத்துக் கொண்டால்
தேன்மலர்த் தோட்டம் வாடும்
திங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டால்
வானத்தில் இருள் சூழ்ந்துவிடும்
தென்றல் போலும் திங்கள் போலும் நீ
விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் தினம் வருவதால்
என் மனம் வாடுவதில்லை
என் பௌர்ணமி ஒருநாளும் தேய்வதில்லை !