சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 70

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 70
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் தலத்தில் சித்திரை திருவிழா 'பிடிமண்' எடுத்தல் சிறப்பு :-

●●●●●●●●●●●●●●●●●●●
சங்கரநாராயணர் தலத்தின்
சித்திரைத் திருவிழா
யானை பிடிமண்
எடுக்கும் வைபவம்

காலையில் கோமதியான
கருநிற யானையில்
வெள்ளை திலகமிட்டு

பூமியில் புற்கள்
பனியுடன் முளைத்து
பூமியின் தேகத்தினை
பசுமைப் போர்த்துவதாக
பசுமை நிறத்தில்
போர்வையினைப் போற்றி

வெண்சங்கலானக் குடைப்பிடடித்து
வண்ணமயில் சிறகினால்
சாமரம் வீசிட
சந்திரசேகரசுவாமி யானையின்
மேல் ஏறி
மேள தாளங்களுடன்
வானில் பறக்கும்
வண்ண வெள்ளிகள்
வட்டமிட்டு மறையும்
வெடி முழங்க

வழியெங்கும் விழிகண்டு
வணங்கிடும் மக்கள்
கூட்டமதை கடந்து
களாப்பாகுளம் அடைந்து

பெருங்கோட்டூரில் அருள்புரியும்
திருக்கோட்டி அய்யனாரின்
கோவில் வளாகத்தில்
மாமறவர் உக்கிரபாண்டியர்
பட்டத்து யானை
திருவுருவச் சிலையருகே

யானைக் கோமதி
தும்பிக்கையால் மினுமினுக்கும்
தங்க மண்வெட்டியை
பிடித்து பிடிமண் எடுத்து
சந்திரசேகரசுவாமி பிடிமண்ணுடன்
ஊர்மக்களுடன் ஊர்வல
பவணியாகச் சங்கரநாராயணர்
ஆலயம் நோக்கி
பயணிக்கும் கோமதியையும்
சந்திரசேகரசுவாமியையும் வரவேற்க

மங்கையர் நீராடி
மஞ்சள் நீரை
இல்ல வாசலின்
முற்றம் தெளித்து
மாக்கோலம் வரைந்து
கோமதியை வரவேற்பர் .....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Sep-23, 6:05 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 17

மேலே