சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 71

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 71
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் தலத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம் சிறப்பு :-
●●●●●●●●●●●●●●●●●●●
மண் எடுத்தல்
முடிந்த மறுநாள்
கருமுகில் தொடும்
கொடி மரத்தில்
சிவனது ரிஷ்ப
வாகனத்தின் ரூபம்
வரைந்தக் கொடியை
தங்கக் கொடிமரத்தில்
தங்கக் கயறு கொண்டு
தர்மம் ஆத்மா
இரண்டும் வடிவான கொடியை
இணைத்து மேலலேற்றும் வைபவம்
மூவுலக உயிர்களையும்
தர்மங்களும் மேல்நிலையை உயர்த்தும்
இறைவனின் கருணையை உணர்த்தும்

கொடியிறக்கும் வரை
நித்தமும் நடைபெறும்
நித்திய வழிபாடும்
சிறப்பு வழிபாடுடன்
சுவாமியும் அம்பாளும்
வாகனங்கள் பலவற்றில்
எழுந்தருளி பிரகாரங்களிலும்
வீதிகளிலும் உலா வந்து
ஆலயம் வர இயலாத
பக்தர்களுக்கு திருமேனி
காட்சித் தந்து
அருள்புரிவர் ..

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Sep-23, 6:09 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 13

மேலே