வெற்றிக்கு வழி

வெற்றிக்கு வழி வெட்டு
**************************
திக்குத் தவறிய திற்குத் திணறிய
திக்திக் மனிதரைத் திட்டத் தகுமோ
சிக்கிக் சிதறிய சிற்பச் சிலையினைச்
செத்துத் தொலையெனச் செப்பற் றறிவோ
துக்கத் தொருவரைத் துட்டுக் கொடுவெனத்
துச்சத் தனமொடு தொத்தச் சுகமோ
தக்கத் தகுவழி தட்டுப் படுமதை
தட்டிக் கழியுமத் தப்புச் சரியோ
*
கொத்திக் குதறியக் குட்டிக் கயலது
கொக்கிற் குணவுறற் கொப்பக் கெடவே
கத்திக் கதறிடக் கத்திக் குயிரினைக்
கப்பப் பொருளெனக் கட்டத் தகுமோ
குத்திக் கிளறிடக் குப்பைப் பொருளெனக்
குத்தக் குருதியைக் கொட்டச் சுகமோ
சுத்தப் படவுளச் சுற்றுப் புறமதைச்
சுற்றிக் கழிவிடச் சுத்தப் படுமோ?
*
துச்சப் படுகிறத் துட்டத் தனமதைத்
தொட்டுத் தொடருறத் துட்டுக் கெடுமே
இச்சைக் கெனவித ழெட்டச் சதிவர
இச்சைப் படு'மது' எட்டிக் கனியே
அச்சக் கனியதற் கச்சப் படுமுனை
அச்ச மெதிரிடற் கச்சப் படுமே
உச்சிக் கிளைகளி லுற்றக் கனிதர
ஒத்தத் தருவதற் கொப்பச் சுகமே
*
பட்டப் படிப்புறப் பட்டப் படிப்பினைப்
பக்கத் துணையெனப் பற்றிக் கொளவே
திட்டப் படுவெனத் திட்டிப் புகட்டிய
திற்குப் பொருளெனத் தித்தித் திடுமே
கெட்டப் படிப்பினைக் கற்றுக் கொடுத்ததைக்
கெட்டிப் படுத்திடக் குட்டிச் சுவரே
கட்டப் படுத்திடற் கொப்பக் கெடுப்பவைக்
கற்கத் தடுப்பிடக் கற்கைச் சிறகே
*
உப்புக் கொருவழி யற்றுக் கிடப்பரை
உற்றக் கவனமு முற்றற் றறமே
தப்புத் தப்பெனத் தப்பிப் பிழைப்பதை
தப்புத் தப்பெனத் தப்பற் பிழையே
ஒப்புக் கொருமுறை ஒப்பப் படுவதை
ஒப்புக் கொளுவது ஒப்பத் திழிவே
சப்பக் கழிகிறச் சக்கைக் குளுமுள
சத்திற் றெழுவிதைச் சக்திக் குரிதே
*
சுற்றித் திரிகிற சுட்டித் தனமுனை
சொட்டுத் துளிவிழி சொட்டற் குறுமே
பற்றிப் பிடிநமை பற்றற் கரியவை
பக்கப் பலமுனை பத்திக் கொளுமே
உற்றத் துணையவை ஒட்டிக் கொளுவதை
ஒத்துக் குடியமை உச்சத் திரவே!
வெற்றிக் கொருவழி வெட்டிச் சமையதை
விட்டுத் திரிவது வெட்டித் தனமே
*
மெய்யன் நடராஜ்
03-10-2023

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Oct-23, 2:01 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 69

மேலே