அறநூல் சொல்வதை அருமையா யறிந்துமே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(புளிமா கூவிளம் கருவிளம் கருவிளம் /
கூவிளம் புளிமாங்காய்)
(1, 5 சீர்களில் மோனை)

செறிந்த வாய்மையும் செகந்தனிற் சிறப்புறு
..செம்மையாய் வளமுற்று
நிறைந்த நெஞ்சினில் நிறைவுற நிகழ்ந்திடும்
..நேர்மையே கருத்தாகும்!
அறநூல் சொல்வதை அருமையா யறிந்துமே
..யாள்வதை வழகென்பேன்
அறிஞன் யாரென இனிதுற வறிந்துபின்
..னாள்வதுஞ் செழிப்பன்றோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-23, 9:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே