சுட்டுவிரல் காட்டிவிடு சுத்தியுனை வந்திடுவேன் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 4)
(1, 3 சீர்களில் மோனை)

வட்டவட்டப் பாறையிலே வந்துநிற்கும் பெண்மயிலே;
விட்டெறிஞ்சு பேசாதே வேண்டியதைச் சொல்லிநில்லு!
உட்கருத்து நானறியே னுள்ளமதைச் சொல்லிவிடு;
சுட்டுவிரல் காட்டிவிடு சுத்தியுனை வந்திடுவேன்!

- வ.க.கன்னியப்பன்

சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Oct-23, 10:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே