மானத்தை வாங்கும் சனியன்

நேரிசை ஆசிரியப்பா


தமிழர் எல்லையுங் குமரி தெற்கில்
தமிழரின் வடயெல்லைத் திருவேங் ட ந்தான்
தமிழ்சேரன் இளங்கோ சொன்னது சிலம்பில்
தமிழரைப் பழித்த கனகவிச யர்கதை
கொள்ளை செய்த வெள்ளையும் தமிழுடன்
மலையாளம் கன்னடம் ஆந்திரம் கூட்டியே
மதராஸ் என்றான் அன்றுமே வடவர்
மதராசி சோரிவாலா என்றார் இன்றுமே
தமிழக மந்திரிமார் பல்லாண்டு பாடி
பல்லா யிரங்கோடி கொள்ளை செய்து
மான மில்லா சிரிக்கிறார் பெரியார்
அண்ணா வாழ்க என்று
தமிழரின் பெயரை ஒழித்தது திராவிடரே

எழுதியவர் : பழனி ராஜன் (30-Oct-23, 7:33 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே