அழிவும் ஆனந்தம்

அப்பாவிகளையும்
எல்லையில் நம்மைக்
காக்கும் இராணுவ வீரர்களையும்
கொல்லும் தீவிரவாதிகளுக்கு
பலவித வெடிகள்!

இயற்கைக்கு கேடு செய்யும்
கும்மாளப் பிரியர்களுக்கு
எண்ணற்ற
பட்டாசு வெடிகள்!

அழிப்பதுவும் ஆனந்தம்
கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும்

கர்ப்பிணிப் பெண்டிரையும்
பிணியாளர்களையும்
பச்சிளம் குழந்தைகளையும்
மூத்த குடிமக்களையும்
வீட்டு விலங்குகள்
பாடித்திரியும் பறவைகள்
இரத்த அழுத்தம் உள்ளோரையும்
மின்னல் வேகத்தில்
எமலோகம் அனுப்பி வைக்க
பட்டாசுத் பிரியர்களே
ஈவிரக்கமின்றி
இடியோசை எழுப்பும்
பட்டாசுகளை வெடித்திடுங்கள்.

அதுதானே நீங்கள் விரும்பும் ஆனந்தம்
கல்வியறிவு தோற்றது கந்தக வாடையில்!

எழுதியவர் : மலர் (11-Nov-23, 7:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 45

மேலே