விளங்கியதே

விளங்கியதே... !
11 / 11 /2023

கண்கள் இரண்டும் பேசும் போதும்
காதில் மௌனம் கரையும் போதும்
கைகள் இறுக இணையும் போதும்
இதழ்கள் இரண்டும் பதியும் போதும்
இதயம் ஒன்றாய் துடிக்கும் போதும்
மோகத்தீ எரிம லையாய் வெடித்தே
ஒன்றுக்குள் ஒன்றாய் ஆன்மா கலந்த போது
சக்திக்குள் சிவன் அடக்கம் எனும்
அர்த்தநாரியின் அர்த்தமும் அது சொல்லும்
வாழ்வின் சூத்திரமும் முழுதாய் விளங்கியதே... !

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (14-Nov-23, 4:45 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 40

மேலே