என் அண்ணன்
என் அண்ணன்
××××××××××××××
பொங்கிடும் வெள்ளியாக துள்ளி வந்து கூழங்கற்களை உருட்டி விளையாட சலங்கை ஒலி எழுப்பிச் செல்லும் கருப்பா நதிக்கரை ஒட்டிய மேலக்கலங்கல் சிற்றுரில் கோமதியெனும் வெகுளிப் பெண்ணும் மென்மையான அவளது அண்ணன் நெல்லையப்பனும் இரட்டையார்கள் நிலவும் இரவுமாக இணைப் பிரியா உடன் பிறப்புகள்..
நெல்லையப்பன் காட்டில் மாடு மேய்க்கும் தங்கை கோமதிக்கு மோர் கலந்து கம்மங்கூழ் காய்ச்சி கத்தரிக்காயில் தொக்கு செய்து தூக்கு வாளியில் நிரப்பி கோமதி இருக்கும் இடம் தேடிச் செல்ல..
உச்சி வெயிலில் கோமதியின் உச்சி தலையில் சுனையாக வியர்வை வெளியேறி மழையின்றி வாடியப் பூமியை நனைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் நெல்வையப்பன் கண்கள் மேகமாக கலைய மழையாக கொட்டியது கண்ணீர்..
பசியோடுக் காத்திருந்தக் கோமதி மேகம் கண்டு தோகை விரித்தாடும் மயிலாக அண்ணன் வருகையைக் கண்டவுடன் துள்ளி வந்தவள்..
அண்ணன் கண்ணீர் வடிப்பதைக் கண்ட கோமதி..ஏன் ? அழுகிறாய் அண்ணன் என்றாள்..
அதற்கு ,நெல்லையப்பன் நான் ஒரு பாவி ,உன்னை படிக்க வைத்திருந்தால் இவ்வளவு வேதனையை அனுபவித்திருக்க மாட்ட என்றவனை,
அண்ணா கண்கெட்ட பின் சூரியனை வணங்கி என்ன செய்ய..ஆண்டவன் என் தலையில் என்ன எழுதிருக்கானோ அதுப்படிதான் நடக்கும் என்றாள்..
தலையெழுத்து சரியில்லைனு கையெழுத்து போடத் தெரியாமல் இருப்பது மூடநம்பிக்கை.
பள்ளிக் கூடம் அனுப்பாமல், மாடு மேய்க்க அனுப்பியது அப்பனும் ஆத்தளுந்தான் இதுல ,ஆண்டவன் எங்க வந்தான்..
கோமதி இனிமேல் மாடு மேய்க்காமல் ,நாளை முதல் பள்ளிக்குப் போயென்று கண்ணீரை துடைத்தவன்..
நிமிர்து பார்த்தான் காக்கி சீறுடையில் நிமிர்ந்து நின்றாள் கோமதி
நினைவா கனவா ? என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தான்,வலியின் உணர்வோடு கல்வியின் அவசியத்தின் உணர்வை உணர்ந்தான்
சுபம்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்