வெளிநாட்டு வாழ்க்கை நரகமே
வெளிநாட்டு வாழ்க்கை நரகமே
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் என்ற
கவிஞர் அ.மருதகாசி அவர்களின் உன்மை வரிகள்
எல்லா வளமும் உள்ளது இந்தியா திருநாட்டில்
அதை பயனுள்ள வகையில் பயண்படுத்தி வருமானத்தை பெருக்கி அயல் நாட்டில் இந்தியாவின் பெருமையை உயர்த்துவதை விட்டுவிட்டு
வெளிநாட்டிற்கு விமானத்தில் சென்று இந்தியா மானத்தை கப்பல் ஏற்றி அடிமையாக வாழும் வெளிநாட்டு வாழ்க்கை நரகமே...
ஊரை சுத்தும் காற்றே
உசிலம்பட்டி பக்கம் போன
ஒன்னும் சொல்லாத
கவலைகளை சொல்லாத
கண்ணீர்களை சொல்லாத
பிள்ளைகள் நெஞ்சம் பாடுபட்ட
பெத்த மனசு தாங்காது
இன்றைய கவிஞரின் வேதனை வரிகள் வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் துயரத்தை தனது கவி வரிகள் மூலம் கண்ணீர் துளியை வர வைக்கிறார்
பணத்திற்காக தனது அன்பு பாசம் சந்தோஷங்களை இழந்து உணர்வற்ற உடலாய் உழைப்பது நரக துயரம்ந்தான்
உணவு உடை உறைவிடம் மூன்றும் அவசியம் அதற்கு வெளிநாடு சென்றுதான் வேதனையான தனிமையில் பெற வேண்டும் எனபது இல்லை
வீராணம் குடிநீர் திட்டக் குழாயில் மனைவி குழந்தைகளுடன் வாழும் சந்தோஷம் வெளிநாட்டு வாழ்க்கையில் கிடைக்காது
பக்கத்து வீட்டு குழந்தையின் தகப்பன் மிதிவண்டியில் பள்ளி கொண்டு விடும் சந்தோஷம்,
வெளிநாட்டில் வசிப்பவன் பிள்ளைகள் உயர் விலைந்த வாகனத்தில் ஓட்டுநர்கள் அழைத்து செல்வதில் இருப்பதில்லை இது இங்கு வாழும் குழந்தைகளுக்கு நரகம்
" பக்கத்து வீட்டில் குழந்தைகளை அப்பாக்கள் மடியில் வைத்து கொஞ்சி விளையாடுவதை பார்த்து வெளிநாட்டில் வசிப்பவன் குழந்தை ஏங்கி தவிர்ப்பது என் கண்ணால் கண்டு கண் கலங்கி உள்ளேன்
இதனால் அக்குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்...
என் அன்பான வேண்டுகோள் வெளிநாட்டில் இருக்கும் அப்பாக்கள் இப்பதிவை படிப்பவர் தாயகம் திரும்பி விவசாயம் செய்தாவது தனது குழந்தையுடன் வகித்தால் சந்தோஷம்
வெளிநாட்டு வாழ்க்கை அங்கு இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல இங்கு இருக்கும் அப்பாவின் பிரிவில் வாழும் குழந்தைக்கும் நரகமே என கூறி வாய்ப்பு தந்த நடுவர் அவர்களுக்கும் குழுமத்தின் நிர்வாக கவி பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி மீன்டும் சந்திப்போம்...