வென்றிடும்கூர் வேல்விழியர் வெண்ணகைநல் முத்தாட

குன்றில் மயிலாட கோலோச்சும் வேலாட
அன்றலர்ந்த பூக்கள் அழகினில் ஆடிட
வென்றிடும் வேல்விழியர் வெண்ணகை முத்தாட
குன்றிலாடு வான்நின்றான் காண்


குன்றத்தில் மயிலாட கோலோச்சும் வேலாட
அன்றலர்ந்த பூவெல்லாம் ஆடிடவே அழகினிலே
வென்றிடும்கூர் வேல்விழியர் வெண்ணகைநல் முத்தாட
குன்றிலாடு வான்நின்றான் காண்பாய்நீ கண்குளிர

--மேலே உள்ள வெண்பா
--காய் காய் காய் காய் கலிவிருத்தப் பாவினமாய்
எதுகையுடன் மோனையும் பொழியும் அழகையும்
யாப்பார்வலர் கண்டு ரசிக்க

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-23, 9:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே