அன்பே

மூக்கு வரை மூழ்க வைத்தாய்
மூச்சு திணறி போனேன்
தொண்டை குழியில் காதலை வைத்து
திக்கி தடுக்கி நின்றேன்
தெரிந்தும் தெரியாததேதோ
புரிந்தும் புரியாததேதோ
காதல் என்ற வார்த்தைக்குள்
என் உலகம் சுருங்கி விட்டதே
பக்கம் பக்கமாய் எழுதும் கவிதைக்குள்
எட்டி பார்க்கிராய்
விழி மூடினாலும் விடியும் வரை
என்னோடு பேசுகிறாய்
இந்த உலகத்தை பார்திடும்
நிலவே உன் விழியில்
நான் மட்டும் ஏன் இல்லை
சிரித்து பேசும் கைபேசியில்
நசுங்கும் எண்களா
என் காதல் உன் முன்னில்
அன்பே....

எழுதியவர் : Rskthentral (21-Nov-23, 12:00 am)
சேர்த்தது : rskthentral
Tanglish : annpae
பார்வை : 121

மேலே