குஷ்

பீக்கார்ல வேலை பார்க்கிற கடைசிப் பேரா,
உன்ற மனைவிக்கு பையன் பொறந்து ஒரு மாசம் ஆகுதுனு சொன்ன. உன் மனைவியும் குழந்தையும் நல்லா இருக்கிறாங்களா? குழந்தைக்கு என்ன பேருடா வச்ச? தமிழ்நாட்டில தமிழ் ஆசிரியர்களே அவுங்க பிள்ளைகளுக்குப் பெருமையா வாயில் நுழையாத அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்களைத்தான் வைக்கிறாங்க. நீ மட்டும் என்ன தமிழ்ப் பேரையா குழந்தைக்கு வச்சிருக்கப்போற?
@@@@@@
நீங்க சொல்லறது நூத்துக்கு நூறு சரிதான் பாட்டி. எங்க பையனுக்கு இந்திப் பேரு - சாமியோட மகன் பேரைத்தான் வச்சிருக்கிறோம்.
@@@@@@
சாமிக்கு மனைவி பிள்ளை குட்டி எல்லாம் இருக்கறாங்களா?
@@@@@@@
சாமிக்கு எல்லாம் திருக்கல்யாணம் ஒவ்வொரு வருசமும் பண்ணி வைக்கிறாங்க.
@@@@@
பர்கூர் மலைப்பகுதியில் இருக்கிற இந்தக் கெழவிக்கு இதெல்லாம் தெரியாதுடா பேரா. சரி எங் கொள்ளுப் பேரன் பேரைச் சொல்லுடா.
@@@@#@#
அவன் பேரு 'குஷ்'.
@@@@@@@
அடே பேரா, எங் கொள்ளுப் பேரன் பேரை என்னால சரியாச் சொல்ல முடியாது. நான் அவனை 'குச்சு'னு கொஞ்சுவேன். கோவிச்சுக்காதடா சாமி.
@@@@@@@
உங்க அன்பே எங்களுக்குப் போதும் பாட்டி. உங்களைப் பார்க்கிறதே எங்களுக்கு கோடி புண்ணியம்.
@@@@@@@@@@@@@@@@@@