மழைக்கால நட்சத்திரம்

. மழைக்கால நட்சத்திரம்
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

கருத்த இருட்டில் கட்டிலில்படுத்தேன்
வாசல் என்பதால் வான்வெளி தெரிய
தூரல் மழையோ கொஞ்சம் பெய்து
ஏனைய மழையை இறுக்கிப் பிடித்து

மேகக் கூட்டம் எங்கோ விரைய
மழைக்கு விடுமுறை நிலவும் எடுக்க
மத்தாப்பு பொறியாய் கொட்டிக் கிடந்த
நட்சத்திரத்தை நான் இன்று தேட

சின்னச் சின்னதாய் மின்னல் கீற்று
சில நேரம் அதனுள் இடறும் சத்தம்
உன்னை பார்க்க எனக்குள் ஆசை
உதித்தது என்ன அப்படித் தவறா ?

கண்ணைக் கட்டி கருக்களுக்கள்ளே
கண்ணாமூச்சி விளையாடும் நீயோ
ரசிகன் எந்தன் ஆசையை போக்க
நொடி நேரம் கூட முகம் தன்னை காட்டாய்

மாடி வீட்டு பெட்டிப் பணமாய்
கோடி கோடியாய் கொட்டி இருந்தும்
ஏழைவீட்டு சட்டைப் பையாய்
ஏமாற்றி போவது எப்படிச் சரியா ?

🌥🌥🌥🌥🌥🌥🌥🌥🌥🌥🌥🌥🌥🌥🌥🌥🌥

எழுதியவர் : க. செல்வராசு (1-Dec-23, 4:35 am)
பார்வை : 76

மேலே