ஆலமரம்

அது ஒரு அடர்ந்த ஏரி பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது மலைகளில் தொடங்கி காடுகளில் படர்ந்து மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாய் இருந்தது.காலங்கள் மாறின நாட்கள் செல்ல செல்ல காடுகள் வீட்டு மனைகளாக மாறத் தொடங்கினார் மலைகள் வீட்டு உபயோக கற்களாக வந்தன. எல்லாம் மாறின சுற்றி இருந்த அத்தனையும் மெல்ல மெல்ல மறைய தொடங்கின.அந்த ஏரியின் கரையும் தொன்று தொட்டு ஒரு ஆலமரம் இருந்தது. பல மரங்களுடன் மகிழ்ச்சியால் இருந்த காலங்கள் மாறி தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டது எனினும் அது பல விழுதுகள் விட்டு படர்ந்து விரிந்து பல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சரணாலயமாக அடைக்கலமாக இருந்து வந்தது.

ஆரம்ப காலத்தில் இருந்த வசந்தமும் நட்பு மரங்களும் இன்றி தனியாக இருப்பதை நினைத்து சில நேரங்களில் சிந்திப்பது உண்டு ஆலமரம். காலங்கள் மாறுகின்றன பருவங்கள் மாறுகின்றன நேற்று போல் நேத்து இருப்பதில்லை இன்று போல் நாளை இருப்பதில்லை என்பதில் உறுதியாக கொண்டு தனியாக தொடர்ந்து அந்த ஏரியை அழகுப்படுத்திக் கொண்டு தன்னை தானே எதற்கும் தயார் படுத்திக்கொண்டு எல்லா உயிர்களுக்கும் அடைக்கலம்மாய் படர்ந்து விரிந்து ஏரியின் கரையை பாதுகாத்துக் கொண்டு இருந்தது அந்த ஆலமரம்.. இயற்கை அன்னை அவ்வப்போது இரக்கப்பட்டு மழையால் குளிர்விப்பாள்.

சூரியனும் தனது வெப்பத்தை அந்த மரத்தின் குறைத்து கொள்வான்.
அணிகளும் பறவைகளும் ஆரத்தழுவி கொள்ளும் இவை தான் அவற்றிக்கு மருந்து.

வெளிபார்வைக்கு படர்ந்து பிரிந்து பிரம்மாண்டமாக தெரிந்தாலும் அது தனது தனிமையின் வலிகளையும் வேதனைகளையும் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை ..

இந்த உலகில் அந்த ஆலமரமும்
சில மனிதர்களும் அப்படி தான்!!!

எழுதியவர் : சசி குமார் (3-Dec-23, 4:59 pm)
சேர்த்தது : சசி குமார்
Tanglish : alamaram
பார்வை : 152

மேலே