என்னவளும் தாமரையும்

மாமலர்த் தாமரை மொட்டாய் இருந்தாலும் அழகு
மொட்டவிழ்ந்து இதழ்கள் விரிந்தாலோ அழகோ அழகு
என்னவளும் தங்கம்போல் இன்முகத்தாள் பேசாது
உம்மென்று இருந்தாலும் அழகு இல்லை
இதழ்கள் மெல்ல விரிய புன்னகைத்தாலோ
இல்லை முழுவதுமாய் விரிந்து முல்லைச்சரம் அன்ன
வெண்பற்கள் உள்ளடங்கி சிரித்தாலும் கொள்ளை அழகு
தாமரை இவள் பெயருக்குத்தான் என்ன பொருத்தம் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Dec-23, 2:44 pm)
பார்வை : 149

மேலே