நமக்கெதற்கு

நமக்கெதற்கு?
25 /02 /24
ஆயன் ஏசுவும் நம்கடவுள்
அன்பர் அல்லாஹ்வும் நம்கடவுள்
ஆறுமுகனும் நம்கடவுள்.
கடவுளர்க்குள் பேதமில்லை
நீ பார்க்கும் பார்வையில்தான்
பேதங்கள் உண்டு.
சக மனிதனையும்
கடவுளாய் பாவித்துவிட்டால்
நமக்குள் ஏன் வருகிறது
மதப்பிரிவினை?
அவரவர்களுக்கு பிடித்த
பாதையில் அவரவர்கள் நடக்கட்டும்.
உனக்கு பிடித்த பாதையில்
நீ நட
மனிதத்துவத்தை மட்டும்
நாம் பின்பற்றுவோம்.
மதவெறி இங்கு
நமக்கெதற்கு?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Feb-24, 2:30 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : namakketharkku
பார்வை : 36

மேலே