நடந்திடு

நடந்திடு
25 / 02 /24
மக்களே...மக்களே..
ஓடி வாங்க
ஆரோக்கியம் பற்றி
சொல்லுறேன்
காது கொடுத்து கேளுங்க
துரித உணவும் - வாய்க்கு ருசியான
வறுத்த.... எண்ணையில் பொரிச்ச
உணவிற்கு பதிலாய்
வடிச்ச சோறும் வத்த குழம்பும்
கம்பங் கூழும் வெங்காயமும்
முருங்கை இலை சேர்த்த
கேழ்வரகு அடையும்
சிறுதானிய கூட்டும் தினை மாவும்
வரகு அரிசி சாதமும்
கோதுமை சோள பதார்த்தமும்
தினமும் உண்டு வந்தால்
வலுவாய் மாறி
நோய் எதிர்ப்பும் கூடி
உடலும் உள்ளமும் உறுதியாகும்.
நேரம் தவறாமல் சாப்பிட்டால்
நோய்க்கூட நெருங்க பயப்படும்
இது சத்தியம் உண்மை நம்பிடு
வாழ்வில் பின்பற்றி நடந்திடு

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Feb-24, 2:51 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : nadanthidu
பார்வை : 48

மேலே