பொய் பேசும் மகனின் வருமானம்
ஏனுங்க உங்க கடைசி மகன் ஆரம்பப்பள்ளி நாட்களில் இருந்தே பொய் பேசுவதையே வாடிக்கையாக் கொண்டிருந்தானு அடிக்கடி சொல்லுவீங்களே அவன் இப்ப என்ன வேலையில் இருக்கிறேன்.
@@@@@@
விழுந்து புரண்டு இளங்கலைப் பட்டம் வாங்கினான். உருப்படாதவன், ஊதாரி, நாதாரினு ஊர் சனங்க பாராட்டற அளவுக்கு இருந்தான். தொடர்ந்து பொய் பேசி கின்னஸ் பதிவேட்டில் இவன் பேரும் பதிவாகிருச்சு.
@@#@#@
அப்பறம் என்ன ஆச்சுங்க?
@@@@@@@@@
அதிர்ஷ்ட காற்று அவன் பக்கம் வீச, மட்டையாட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்கிற மாதிரி எங்களுக்கு ஒரு அரசியல் கட்சி பத்து இலட்சம் கொடுத்துட்டு அவனுக்கு அந்தக் கட்சில தலைமை செய்தித் தொடர்பாளர் பதவி கொடுத்துட்டாங்க.
#@@#@#
அப்பறமுங்க.
@@@@@@@@@
அந்தக் கட்சியின் பணக்கார பிரமுகர் ஒருவரின் மகளை திருமணம் பண்ணீட்டான். கட்சிக்காக பொய்ப் பிரச்சாரம் பண்ண ஒரு கார், வசிக்கிறதுக்கு ஒரு பங்களா. எந்த நட்சத்திர விடுதிக்குப் போனாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
அவனுக்கு ஆகும் எல்லாச் செலவுகளையும்
கட்சியே கட்டிவிடும். மாத இரண்டு இலட்சம் சம்பளம். எந்த வரியும் கட்டத் தேவையில்லை.
@@@@@@@@
அப்பறமுங்க...
@@@##@@
எங்க வீட்டுக்கு மாதம் ஒரு தடவை வந்து பத்து நிமிடம் இருந்து நலம் விசாரித்துவிட்டு போயிடுவான். அவனை கேலி கிண்டல் செய்தவங்க எல்லாம் அவனோட பொய்ப் பிரச்சாரத்தை இரசித்துக் கேட்க மணிக்கணக்கில் காத்துக் கிடக்கறாங்க. நாங்க அவனைப் பெத்ததுக்கு வெட்கப்பட்டோம்; வேதனைப் பட்டோம். இப்ப அவனை இலட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள்.
@@@@@@@
ஆமாங்க. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பொய் பேசியும் வாழ்க்கையில் உயரலாம்ங்கிறதுக்கு உங்க கடைசி மகன் மெய்யறிவு அருமையான சான்று..