இடப்பெயர்ச்சி
டேய் மருது, ....
@@@@
என்னை இனிமேல் 'மருது'னு கூப்படாதே. என் பேரை 'மருதேஷ்'னு மாத்திட்டேன்.
@@@@@
சரி. ஒடுங்கி பலநாள் பட்டினி கிடந்தவன் மூஞ்சி போல இருந்த உன் மூஞ்சி இப்ப ஊதிப் பளப்பளனு இருக்குது. வழக்காமா நீ வெள்ளை முழுக்கை சட்டையும் வேட்டியும் கட்டீட்டு இருப்ப. இப்ப மஞ்சள்நிற முழுக்கைச் சட்டையும் முழுக்கால் சட்டை அணிஞ்சிட்டு அந்தச் சட்டைக்கு மேலே கருப்பு நிறத்தில் அரைக்கை சட்டை போட்டிருக்கிற. என்னடா மருது. மன்னிச்சுக்க. என்னடா ஆச்சு மருதேஷ்?
@@@@@@
டேய் கதிர் உன் கேள்விக்கெல்லாம் ஒரே பதில் "இடப்பெயர்ச்சி". இதுக்கு மேலே ஒண்ணும் கேக்காதே, உன்னோட பேரை 'கதிரேஷ்'னு மாத்திட்டு நீயும் என்னைப் பின்பற்றினால் குரு இடப்பெயர்ச்சியால் உனக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.