மாற்றம் வேண்டும்

சூடு கொண்ட காஃபி கூட
சூட்டை கொஞ்சம் தணிக்கிறதே
அடுப்பில் இருந்து இறக்கி வைத்த
ஆறு நிமிட இடைவெளியில்

மனிதன் கொண்ட கோவம் மட்டும்
வாழ்க்கை முழுதும் தொடர்கிறதே
மறதி என்னும் நோயும் அங்கு
மறந்து கொஞ்சம் கிடக்கிறதே

நட்டு வைத்த செடியும் கூட
நான்கு ஆண்டில் மலர்கிறதே
மக்கிப் போன இலைகள் உண்டு
மலர்கள் தன்னில் கொடுக்கிறதே

வருடம் பலவும் ஓடினாலும்
வறுமை மட்டும் வளர்கிறதே
வளர்ச்சி எங்கள் மக்கள் உடலில்
வயதில் மட்டும் உயர்கிறதே

குவிந்து கிடக்கும் குப்பைக் கூட
கொஞ்ச நாளில் மறைகிறதே
கோடை வெயிலில் பறவைகளும்
இரையைத் தேடி பறக்கிறதே

கொட்டி கிடக்கும் வளங்களை நம்
மக்கள் மனங்கள் மறக்கிறதே
குறுக்கு வழியில் காசு தேட
கோடி மனங்கள் நினைக்கிறதே

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (28-Mar-24, 9:01 pm)
Tanglish : maatram vENtum
பார்வை : 70

மேலே