விட்டில்பூச்சியாய் நான்

விட்டில்பூச்சியாய் நான்.....!
05 / 04 / 2024
பெண்ணே....
தினமும் என்னை
கண்ணால் கொல்கிறாய்...
சொல்லால் கொல்கிறாய்
நடையால் கொல்கிறாய்
உடையால் கொல்கிறாய்
இடையால் கொல்கிறாய்
ஜடையால் கொல்கிறாய்
அலையும் கண்களின்
ஜாடையால் கொல்கிறாய்
பொங்கும் இளமைத்
தீயால் கொல்கிறாய்.
எத்தனை முறை
எனை கொன்றாலும்
மறுபடியும் மறுபடியும்
கொல்லப்பட.....இஷ்டப்பட்டு
உன்னைச் சுற்றிச்சுற்றி
வரும் விட்டில்பூச்சியாய்
நான்.....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Apr-24, 8:59 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 35

மேலே