என்ன தவம் செய்தேனோ

என்ன தவம் செய்தேனோ?
06 / 04 / 2024
பூத்த விழிகள் - எனை
பார்த்த நொடிகள்
பூலோகம் சுழன்று எனை
வீழ்த்திய படிகள்.
மலர்ந்த உன் வதனம்
ஒளிர்ந்த உன் புன்னகை
தொடர்ந்த உன் நினைவு
படர்ந்த உன் கனவு
உள்ளுக்குள் சுகமாய்
உள்ளத்தில் சுமையாய்
கள் தரும் போதையாய்
முள்ளுக்குள் ரோஜாவாய்
பூத்து என்றும் வாடாமல்
நாத்து வயல் பசுமையாய்
காத்து வகை தென்றலாய்
பாத்துப் பாத்து எனை தழுவ
என்ன தவம் செய்தேனோ?
என்ன வரம் பெற்றேனோ?
எனை சேர்ந்த காதலியே
எனை தேர்ந்த ஆருயிரே
பிரிவொன்று நமக்கிடையே
பரியெனவே புகுந்திடாமல்
பிரிவென்று ஒன்றிருந்தால்
நாமிருவருமே ஒன்றாய்
பிரிந்து செல்வோம்
இவ்வுலகையே....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (6-Apr-24, 6:02 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 118

மேலே