அகழ்வாராய்வோர் காணா அற்புதச் சிற்பம்நீ

புகழ்ந்திடும் புத்தகம்உன் புன்னகை தன்னை
புகழேந்தி யும்உன்னைப் பாட்டினில் வைப்பான்
அகழ்வாராய் வோர்காணா அற்புதச்சிற் பம்நீ
புகழாமல் போமோஎன் பா

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
எதுகை ---புக புக அக புக

மோனை 1 3 ஆம் சீரில் பு பு பு பா அ அ பு பா

அகழாராய்வோர் அகழாராய் வோர் : அற்புதச்சிற்பம் --அற்புதச்சிற் பம் --வகையுளி
சீர் கருதி சொல் பிளவுபடல் வகையுளி

புகழேந்தி ---நளவெண்பா எனும் அற்புதக் காவியப் புலவன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Apr-24, 8:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 22

மேலே