காதல் படுத்தும் பாடு

வீட்டில் காதலுக்கு ஒப்புதல் இல்லை
ஓடிப்போய் எங்கோ தலை மறைவாய்
வாழ்ந்திட எண்ணி கால்போன போக்கில்
ஓடும் இளங் காதலர் ....ஓடி ஓடி
நாட்டின் எல்லைக்கே வந்தடைய ..
எல்லையைத் தாண்டி அப்பால் அவ்வூரில்
வாழ எண்ணி வேலியைத் தாண்ட....
எல்லைக் காவலர் கையில் பிடிபட...
இருதலைக் கொள்ளி.....நேரில் காண்கின்றார்..
துன்பமே தந்திடும் காதல்.....!
இருப்பினும் அத்துன்பத்திலும் இன்பம்
காண முயற்சிக்கும் தூய காதலர்கள் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Apr-24, 12:59 pm)
பார்வை : 65

மேலே