தேர்தல் திருவிழா

"தேர்தல் திருவிழா" என்றால்
ஜனநாயகத்திற்கும்
பணநாயகத்திற்கும்
இடையில் நடக்கும்
போராட்டமே

ஜனநாயகம் வென்றால்
கைவிலங்கு இல்லை
சிங்கம் போல் வாழ்க்கை

பணநாயகம் வென்றால்
காலுக்கு விலங்கு
அடிமைப்போல் வாழ்க்கை

ஆகஸ்ட் 15 ம் தேதி மட்டும்
சுதந்திர கொடி
பட்டொளி வீசி பறப்பதில்
பயனில்லை

வாக்காளப் பெருமக்களே
காக்கை குருவி
கதைகள் எல்லாம் பேசி பேசி
இருட்டில் வாழ்ந்தது போதும்

ஒளிமயமான எதிர்காலம்
உங்கள் கையில்
சிந்தித்து பார்த்து
மனசாட்சியை மதித்து
"என் வாக்கு" "என் உரிமை"
என்று சொல்வோம்
ஜனநாயகத்தை
வெற்றிப் பெற செய்வோம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Apr-24, 7:20 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : therthal thiruvizaa
பார்வை : 149

மேலே