பெண்ணின் கண்ணழகிற்கு மயங்காதார் உளரோ தரணியில்

எத்தனையோ வீரர்களை தன் வாளினால்
வீழ்த்திய ஜூலியஸ் சீசரோ
எகிப்திய பேரழகி க்ளியோபாட்ராவின்
வாளினும் கூறிய முதல் பார்வைக்கே பலி
பெண்ணின் கண்ணழகு சரித்திரத்தையே
கூட ஒரே பார்வையால் மாற்றி அமைக்கும்
பல்லாயிர வருடங்கள் கடுந்தவம் புரிந்து
பெற்ற அத்தனை வரங்கள் சக்தியையும்
மேனகாவின் ஒரு பார்வைக்கு இரையாகி இழந்தான்
என்று கூறும் புராணம் ........
இன்றும் பெண்ணின் கண்ணழகிற்கு தம்மையே
கொடுத்திட தயங்காதார் ஏராளம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Apr-24, 3:06 pm)
பார்வை : 99

மேலே