பேரின்பம்

இறைவன் ஸ்பரிசத்தால் ஜடமும் உயிர்பெற்று
இறைவன் அருளால் முடிவில் உய்வெய்தும்
கண்ணன் கைபட்டு மோக்ஷம் அடைந்ததாம் தயிர்பானை!
தன்னைக் கொல்லவந்த பூதனை முலைப்பால்
முற்றும் வாயால் உள்ளிழுத்து than வாய் பட்டதால்
பூதனைக்கும் மோக்ஷம் அளித்தான் ஆயர்குலத்து ஏறு
சக்கரத்தால் தீய சிசுபாலன் தலைக் கொய்து
அவனையும் வைகுந்தம் செல்ல வழிவகுத்தான் கண்ணன்
அறிந்திடு மனமே அதனால் திருமால்
தாள் பற்றிட அழிவில்லா இன்பம் கிட்டும்
அதுவே அவனோடு என்றும் உறவாடி
மகிந்திடும் தூய இன்பம்-பேரின்பம் அதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Apr-24, 4:50 pm)
Tanglish : perinbam
பார்வை : 36

மேலே