புலவர் புரட்சியார்

டேய் முட்டைக் கண்ணு மாதவா, என்னடா

இப்ப ரொம்ப நாகரிகமா முழுக்கைச்

சட்டை, முழுக்கால் சட்டை அணிந்து

அதுக்கு மேலே அரைக்கை கோட்டும்

அணிஞ்சிட்டு பெரிய தலைவர் மாதிரி

இருக்கிற? என்ன ஆச்சு?

@@@@#@#@

டேய் என்னுடைய பழைய பேரைச் சொல்லி

என்னை அசிங்கப்படுத்தாதே. இப்ப நான்

ஒரு அரசியலில் கட்சியில் நட்சத்திரப்

பேச்சாளர்.

@@@@@##

எப்பிடீடா இந்த மாற்றம்?

@@@#####
நான் சின்ன வயசிலிருந்தே திறமையாகச்

பொய் பேசறவன். உனக்குத் தெரிந்த

விசயம் அது. அதோட நான் உன்னைவிட

முதல்நிலை ரவுடி. நான் ஆயிரத்திற்கும்

மேற்பட்ட பொய் ஆதாரங்களைத் தயார்

பண்ணீட்டு உறுப்பினர் பற்றாக்குறை

உள்ள ஒரு கட்சியில் சேர்ந்தேன். எனக்கு

சிறந்த பேச்சாளர் பயிற்சி கொடுத்தாங்க.

நான் பொய் பேசுவதில் வல்லவன் என்பது

தலைவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது.

அடுத்து அடுக்கடுக்காக நான் தயாரிச்சு

வச்சிருந்த பொய் ஆதாரங்களும் அவருக்கு

என் மேலே அளவுகடந்த நம்பிக்கை

ஏற்படுத்திவிட்டது.‌ என் பேருதான்

அவருக்குப் பிடிக்கல. அதனால் எனக்கு

'புலவர் புரட்சியார்' என்ற பெயரைச் சுட்டி

எனக்கு ஒரு நட்சத்திரப் பேச்சாளர் பதவி

கொடுத்தார். இனி எல்லாத்

தொலைக்காட்சி விவாதங்களிலும்

கலந்து பொய் பொய்யாய் பேசி

தொலைக்காட்சி விவாதங்களிலும்

பொதுக்கூட்டங்களிலும் பெரிய‌ புரட்சியே

செய்யப் போறேன்.‌ உலகத் தமிழர்களுக்கு

'புலவர் புரட்சியார்' யார் என்பதைக்

காட்டப்போறேன்டா.

@@@@@@@

நீ வாய்ச் சவடால்காரன். உன்னை இனி

யாரும் தோற்கடிக்க முடியாதுடா

முட்டைக் கண்ணா. மன்னிச்சுகடா 'புலவர்

புரட்சியார்'.

எழுதியவர் : மலர் (14-May-24, 9:23 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 31

மேலே