எனக்கு நானே

சுய கட்டுப்பாடுகளை
விதித்துக்கொண்டிருக்கிறேன்;

அனுபவப் பாடங்களை
போதித்துக்கொண்டிருக்கிறேன்;

நொண்டிச் சமாதானங்களை
நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறேன்;

கலாசார காக்டெய்ல்களை
கண்டுங்காணாமல் இருக்கிறேன்;

பொதுவெளி அநாகரிகங்களை
பொருமிக்கொண்டிருக்கிறேன்;

இன்னப்பிற இங்கிதங்களையும்
புகுத்திக்கொண்டிருக்கிறேன்.

நரைத்தவராயிருந்தால் உங்கள்
நிலையும் இதுவாகயிருக்கக்கூடும்

அங்கிள் - ஆண்ட்டி எனப்படுவதே
அதிகமாயிருக்கையில்…

பூமர் அங்கிள் - பூமர் ஆண்ட்டி
பொல்லாப்பு நமக்கெதற்கு?

எழுதியவர் : ஜ. கோபிநாத் (15-May-24, 9:41 am)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 45

மேலே