ஆஷி
அது ஒரு கிராமம். அந்த கிராம மக்கள் ஒற்றுமைக்குப் பெயர்
பெற்றவர்கள். மூவாயிரம் வீடுகள் உள்ள கிராமம். அந்த
கிராமத்திற்கென்று பரம்பரையா ஒரு சோசியர் குடும்பம் உள்ளது,
அந்த சோசியரிடம் கலந்து ஆலோசிக்காமல் எதுவும் அங்கே
நடக்காது.
இந்த மாதம் அந்த கிராமத்தில் ஒரே வாரத்தில் நான்கு பெண்
குழந்தைகள் பிறந்தன. அந்த ஊர்த் தலைவர் சோசியரைப் பார்த்து
அந்த நான்குகுழந்தைகளுக்கும் இந்திப் பெயர்களைத் தேர்வு
செய்து தெரிவிக்கும்படி கேட்டார்.
@@@@@@@
சோதிடர்: தலைவரே இந்த நான்கு குழந்தைகளும் பெண்
குழந்தைகள். வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு நாட்களில்
பிறந்துள்ளன.இருந்தாலும் நம்ம ஊர் வழக்கப்படி ஒரே வாரத்தில்
பிறந்த இந்த நான்கு பெண் குழந்தைகளுக்கும் ஏறக்குறைய ஒரே
மாதிரியான பெயர்களை வைக்கவேண்டும்.
@@@@@@@@
தலைவர்: சோசியரே இன்னோரு தகவலை நான் சொல்லறேன்,
கடந்த நூறு ஆண்டுகளாக ஒரு தமிழ்ப் பெயர்கூட இல்லாத கிராமம்
என்ற தனிச் சிறப்பு நம்ம கிராமத்துக்கு உண்டு, வெளியூரிலிருந்து
பெண்/ மாப்பிள்ளை பார்க்கும் போதும் இந்திப் பெயருள்ள
பெண்களையும் மாப்பிள்ளைகளையும் தேர்ந்தெடுப்பதே நம்ம ஊர்
வழக்கம்.
@@@@@@@@@@
சரி இந்த நான்கு பெண் குழந்தைகளுக்கும் ஏறக்குறைய ஒரே
மாதிரி பெயர்களைச் சொல்கிறேன். யார் யார் குழந்தைக்கு எந்தப்
பெயர் வைப்பது என்பதை ஊர் தலைவர் ஆகிய நீங்களே முடிவு
செய்து கூறிவிடுங்கள்.
@@@@@@@@@@@@@@
சரி சொல்லுங்கள் சோசியரே.
@@@@@@@@@@@
ஆஷி, காஷி, மாஷி, தூஷி. முதல் பெயர் தான் இந்திப் பெயர், மற்ற
பெயர்கள் இந்திப் பெயர் மாதிரி உள்ள பெயர்கள். சுற்று
வட்டார்த்தில் உள்ள கிராம மக்கள் இந்தப் பெயர்களைக்
கேள்விப்பட்டால் அவர்களும் அவுங்க குழந்தைகளுக்கு இந்தப்
பெயர்களைச் சூட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
@@@@@@@@@@@@
இந்த அருமையான, புதுமையான, பெயர்களைத் தேர்வு செய்து
கொடுத்த உங்களுக்கு ஊர்த் தலைவர் என்ற முறையில் இந்த ஐந்து
பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளிக்கிறேன்,
@@@@@@@@@@
ரொம்ப நன்றி தலைவர் ஐயா,
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Aashi = Blessing, Laughter, Happiness