பாயல் பாயா

ஒரு ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பெற்றோர் இருவர் தங்கள் இரட்டைக் குழந்தைகளை முதல்

வகுப்பில் சேர்க்க வருகின்றனர்.

@@@@@

வாங்க. வணக்கம். கொஞ்ச நேரம் இங்கே உட்காருங்கள். பின்னர்

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களுடன் நீங்கள் தலைமை

ஆசிரியர் அறைக்குள் செல்லலாம்.


@@@@@@@@@@@@@@@@

நன்றி தம்பி.

(ஐந்து நிமிடம் கழித்து இரட்டைக் குழந்தைகளுடன் பெற்றோர் தலைமை ஆசிரியர் அறைக்குள் செல்கின்றனர்)

இருவரும்: வணக்கம் ஐயா.

@@@@@@

வணக்கம். வணக்கம். வாருங்கள். அமருங்கள்.(அவர்கள் அமர்ந்தபின்)

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களைக் கொடுங்கள். பாயல்,

பாயா. வாழ்த்துக்கள். குழந்தைகளுக்குப் புதுமையான,

அருமையான இந்திப் பெயர்களை வைத்திருக்கிறீர்கள்.

@@@@@@@@

பெற்றோர் இருவரும்: மிக்க நன்றி ஐயா.

@@@@@@@

இந்த இரட்டையரில் 'பாயல்' பெண் குழந்தை. 'பாயா' ஆண்

குழந்தை. இந்தப் பெயர்களின் பொருள் உங்கள் இருவருக்கும்

தெரியுமா?

@@@@@@

'பாயல்' ஒரு இந்தி நடிகையின் பெயர். அந்த பெயருக்கு என்ன

பொருள்னு தெரியாதுங்க ஐயா. இரட்டைக் குழந்தைகள் என்பதால்

பையனுக்கு எந்தப் பேரை வைக்கிறதுன்னு ஒரே குழப்பம். அதனால்

'பாயல்'க்குப் பொருத்தமா 'பாயா'னு பையனுக்குப் பேரு

வச்சுட்டோம். யாராவது '"பாயா' இந்திப் பேரா"னு கேட்டா "ஆமாம்

இந்திப் பேருதான். சென்னை 'பாயா' இல்லை"னு

சொல்லவேண்டியது தான். அப்படிச் சொன்னா எல்லாரும் ''பாயல்,

பாயா' அருமையான ஸ்வீட் இந்தி நேம்ஸ்"னு பாராட்டுவாங்க ஐயா.

@@@##

நீங்கள் இருவரும் சொல்லறது சரிதான். இந்தப் பேருங்களை உங்கள்

இரட்டையர்களின் பிறப்புச் சான்றிதழ்களில் பார்த்ததும் எனக்கே

"ஸ்வீட் நேம்ஸ்"னு சொல்லத் தோணுச்சு. வாழ்த்துக்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@Payal = Anklet. Feminine name. சிலம்பு

எழுதியவர் : மலர் (21-May-24, 6:28 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 21

மேலே