தர்மதேவனின் அரசியல் ஆசையில் மண்ணு

தலைவர்: என்னப்பா தர்ம தேவன், நீங்க முதன் முறையாக அரசியலில், அதுவும் எங்களது ஆளுங்கட்சியில் நுழைய ஆசைப் படுறீங்கன்னு என் செயலாளர் சொன்னார். என் கட்சியில் உன்னை சேர்த்துக் கொண்டால் என்னென்ன பணிகள் செய்வீர்கள்?
தர்மதேவன்: ஐயா, நான் பெயரளவில் மட்டும் தர்மதேவன் இல்லை. மனதாலும் செயலாலும் கூட தர்மதேவன் தான். நம் கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் நிதி வாங்கி, அனாதை இல்லங்களுக்கும் ஆதரவற்ற அபலைப் பெண்களுக்கும் கொண்டு சேர்த்து கட்சியில் தர்மசிந்தனையை பலப்படுத்துவேன். கட்சியில் நிலவும் ஊழல் மற்றும் லஞ்சத்தை சிறிது சிறிதாக குறைத்து பின்னர் அறவே ஒழித்து விடுவேன். காந்தி அடிகள் கனவு கண்ட ராமராஜ்ஜியம் அமைய என் உயிரைக் கூடத் தருவேன்.
தலைவர்: ஏம்பா, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
தர்மதேவன்: இல்லை ஐயா. நிரந்தர வருமானம் கிடைத்தால், நிச்சயமாக நல்ல ஒரு பெண்ணை கல்யாணம் செய்துக்கிடுவேன். நானும் ஒரு சராசரி மனுஷன் தானே.
தலைவர்: நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க சம்பாதிக்கவும் வேண்டாம், கல்யாணமும் செய்துக்கிட வேண்டாம். பேசாமல் சந்நியாசம் வாங்கிக் கொண்டு திருவண்ணாமலை, கொல்லிமலை, விராலிமலை, பரங்கிமலை, இதுபோன்ற இடத்திற்கு சென்று தவம் செய்து உயிர் வாழ்ந்துக்குங்க.
உங்களை கட்சியில் சேர்த்துக் கொண்டால், அடுத்த ஒரு வாரத்திற்குள்ளே, என்னை கட்சியை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள்.
தர்மதேவன்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (30-May-24, 3:18 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 9

மேலே