குந்துரா

பையன் பேரு என்னங்க?



@@@@@@@

எதுக்கு கேக்கறீங்க?


#@@@@@##@#

ஆர்வக்கோளாறு தான்.


@@@@@

பையன் பேரு குந்துரா.


@@@@@@@

கொங்குத் தமிழில் 'குந்து'ன்னா 'உட்கார்'னு

பொருள். தெலுங்குல 'ரா'ன்னா 'வா'ன்னு

பொருள். அப்ப உங்க பையன் பேரு

'உட்கார்வா'னு பொருளுங்களா?

@@@@@

அட நீங்க ஒரு பக்கம். ஒரு பிரபல இந்தி

திரைப்பட நடிகையின் கணவர் பெயர்

'குந்த்ரா' னு முடியும். வித்தியாசமாஇந்திப்

பேரா வைக்கணுமே என்ற தமிழ்ப் பற்றில்

இந்தப் பேரை எங்க பேரனுக்கு வச்சோம்.

இதில் என்ன தவறைக் கண்டுபிடிச்சீங்க?

@@@##@##

நாந்தான் ஆர்வக்கோளாறுனு

சொன்னேனுங்களே. குந்த்ரா உலகத்

தமிழர் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு

வைக்காத அருமையான ஸ்வீட் நேமுங்க.

எழுதியவர் : மலர் (17-Jun-24, 7:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 31

மேலே