பிச்சை எடுக்கும் பணக்காரர்கள்

🔴🟠🟡🟢🔵🟣⚫🔴🟠🟡🟢

*பிச்சையெடுக்கும்*
*பணக்காரர்கள்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔴🟠🟡🟢🔵🟣⚫🔴🟠🟡🟢

கிழிந்த
அழுக்கான ஆடை
அணிந்திருக்கும்
"பணக்காரர்கள்...!"

கை கால்
நல்லா தானே இருக்கிறது
பிறகெதற்கு
பிச்சை எடுக்கிறாய்? என்று
யாரிடமும் கேட்காதீர்கள்...
இவர்களுக்கு
மனதில் உள்ள
"தன்னம்பிக்கை ஊனம்....!"

"பாத்திரம் அறிந்து
பிச்சையிடு " என்று
சொல்வார்கள்....
இப்போது
பாத்திரமறிந்து
பிச்சையிட முடியவில்லை
எல்லோரும்
"கியூ ஆர் கோடுள்ள
அட்டை"தான்
வைத்திருக்கிறார்கள்.....

ஆலயங்கள்
அதிகரித்ததால்
அதிகரித்து விட்டது
பிச்சைக்காரர்களின்
எண்ணிக்கை....

இவர்கள்
மூட்டைப் பைகளில்
கந்தளாடை
ஈயத்தட்டு தான்
இருக்கும் என்று
நினைத்து விடாதீர்கள்
"கட்டு கட்டாக
பணம்" கூட இருக்கலாம்...

முதலீடே ! போடாமல்
இலாபகரமாக
தொழில் செய்யும்
"தொழிலதிபர்கள்"
இவர்கள்தான் .......

தர்மம்
தலைகாக்கும் என்பார்கள்
தலையைக் காக்கிறதோ
இல்லையோ
"நம் மானத்தை காக்கிறது...!"

விலைவாசி உயர்வால்
கூலி தொழிலாளிக்கு
ஊதியம்
உயர்ந்ததோ இல்லையோ?
இவர்களுக்கு
கொடுப்பது உயர்ந்து
இல்லை இல்லை
உயர்த்திக் கொண்டார்கள்..

கேட்கும் போது
எதிர்பார்த்த அளவு
போடாமல் போனால்
எதிர்த்து கேள்வி கேட்டு
போராடி பெறும்
இவர்களின் குணம்....
என்று வருமோ
"வாயில்லா
ஜீவன்களாய் வாழும்
இந்த ஏழை மக்களுக்கு...?"

இவர்களின்
"பேங்க் பேலன்ஸ் " மட்டும்
தெரிந்து கொள்ள
முயற்சி செய்யாதீர்கள்...!
பிறகு
"நீங்களும்
இவர்களோடு
சென்று விடுவீர்கள்...!"

*கவிதை ரசிகன்*


🔴🟠🟡🟢🔵🟣⚫🔴🟠🟡🟢

எழுதியவர் : கவிதை ரசிகன் (17-Jul-24, 7:47 pm)
பார்வை : 37

மேலே