சிரித்தபடி இறப்போம்
ஒவ்வொரு நாளும் தவறாமல் வாய்விட்டு சிரிப்போம்
வாழ்க்கைப் புல்வெளியில் மகிழ்ச்சியை விரிப்போம்
எந்நேரத்திலும் மற்றவருக்கு நலனையே சிந்திப்போம்
பிறருக்கு நல்லது செய்வதற்கு மற்றவரை முந்திபோம்
சுயநலமற்ற உதவி புரிந்து வாழ்க்கையில் சிறப்போம்
காலன் கூட்டிச்செல்லுகையில் சிரித்தபடி இறப்போம்!