கம்ரா கோடி திருமணம்

அண்ணா...

@@@@

சொல்லும்மா தங்கச்சி.

@@@@

என்னோட பொண்ணோட இருப்பத்தி

இரண்டாவது பிறந்தநாள் இன்னிக்கு.

அவள் பிறந்ததும் "என் மருமகள். என்

பையனுக்கு அவளைத் தான் திருமணம்

செய்து வைப்பேன்"னு சத்தியம்

பண்ணினீங்க. அவள் முதுஅறிவியல்

படித்து முடிக்கப் போறா.‌ நாம் தூய தமிழர்.

அண்ணி தெலுங்குக்காரங்க. நீங்க

இரண்டு பேரும் எங்க மாப்பிள்ளைக்கு

'கம்ரா'னு பேரு வச்சிருக்கீங்க. Come ரா

அதாவது முதல் பெயர் 'கம்' ஆங்கிலம். 'ரா'

தெலுங்குச் சொல். 'கம்ரா'ன்னா

'வாடா'ன்னு பொருள்.‌ எங்க

மாப்பிள்ளையின் பெயருக்குத் தகுந்த

மாதிரி எங்க பொண்ணுக்கு 'கோடி'

(Goடி)ங்கிற பேரை வச்சுட்டோம்.

'கோடி'ன்னா தமிழில் 'போடி'னு பொருள்.

@@@@@@

இதெல்லாம் தெரியும் தங்கச்சி. நீ

என்னைப் பார்க்க வந்த விசயத்தைச்

சொல்லும்மா.

@@@@@

அண்ணா உங்க மருமகள் படிப்பை

முடிச்சிட்டு திசம்பர் மாதம் நம்ம நாட்டுக்கு

வரப்போறா. தை மாதம் 'கம்ரா'வுக்கும்

'கோடி'க்கும் திருமணத்தை நடத்திடலாம்.

@@@@@

அம்மா தங்கச்சி உன் அண்ணோட

பாசத்தைப் பத்தி உனக்கு நல்லாத்

தெரியும். தை மாதம் நல்ல திருமண

நாளாப் பார்த்து சென்னையில் உள்ள

பெரிய திருமண மண்டபத்தை முன் பதிவு

பண்ணி வச்சுட்டேன். எங்க பையன்

'கம்ரா'வும் இரண்டு மாத விடுப்பில்

அமெரிக்காவிலிருந்து கிறித்துமசு

விடுமுறைக்கு சென்னைக்கு

வந்திடு வான். நீ ஒன்னும்

கவலைப்படாதம்மா. உன் ஆசைப்படியே

கம்ரா-கோடி திருமணம் நடைபெறும்.

@@@@@@

இப்படிப்பட்ட அண்ணன் எனக்குக்

கெடச்சதுக்கு நான் என்ன புண்ணியம்

செய்தேனோ?

எழுதியவர் : மலர் (13-Sep-24, 7:44 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 31

புதிய படைப்புகள்

மேலே