புன்னகைப் புத்தகம் பூப்போல் மெல்லத் திறக்க

புன்னகைப் புத்தகம் பூப்போல்மெல் லத்திறக்க
மென்தென்றல் மின்னல் விழியை வருடிட
உன்னெழில் கூந்தல் உனதுகன்னத் தைத்தழுவ
என்னுள்ளே வந்தாய் இலக்கிய நாயகியாய்
நன்றிசொல் வேனுனக்கு நான்

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-24, 5:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே