முருகனைப் போற்றுவோம்

முருகனைப் போற்றுவோம்

அழகின் சிகரமே அருள் வடிவே போற்றி
ஆறுபடைவீட்டில் அமர்த்தவனே போற்றி
இனிய தமிழின் முதற் கடவுளே போற்றி
ஈசனின் பொறியில் தோன்றினாய் போற்றி
உமைக்கு உகந்தவனே போற்றி
ஊழ்வினை நீக்குவாய் போற்றி
எங்கும் நிறைந்தவனே போற்றி
ஏழைக்கு இரங்குவாய் போற்றி
ஐங்கரனின் தம்பியே போற்றி
ஒரு மெய் பொருளே போற்றி
ஓம்காரத்தை உபதேசித்தவனே போற்றி
ஔவைக்கு அருளினாய் போற்றி
அரும் பெரும் செல்வனே உன்னை
போற்றுவோம் போற்றி போற்றி

எழுதியவர் : கே என் ராம் (8-Nov-24, 9:32 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 14

மேலே